சென்னை மார்ச் 26 சமக தலைவர் சரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரச்சாரத் தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி தவறுதலாக பேசியதாக தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த பாஜ சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்ததில், சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தண்ட னையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் பிணை வழங்கி தண்ட னையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, விசாரணை நடத்தி 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். ஆனால், கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக தகுதி நீக்கம் செய்தது ஏன் என்று புரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு, 30 நாட்கள் அவகாசம் வழங்கி விளக்கம் கோரும் போது, நாடாளுமன்றத்தில் உரிய கால அவ காசம் வழங்காமல், உடனடியாக தகுதிநீக்கம் செய்தது, அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதை தடை செய்வதாகவே எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.