சென்னை, மார்ச் 27- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3ஆம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோ சனைகளை தொடங்கியுள் ளனர். மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி வருகிறது.
இதை முன்னிட்டு, அடுத் தாண்டு ஜூன் 3ஆம் தேதி வரை திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச் சிகள் நடத்த முடிவெடுக்கப்பட் டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘ஏற்கெனவே ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க.வில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முயற் சியை ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
துண்டறிக்கைகள் மூலமாக வும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாக வும், வீடுதோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் இணைத்திடுவோம்” என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திமுகவில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள், பிற அணிகள், அமைப்புகளின் செய லாளர்கள் என அனைவரும் உறுப் பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி, குழுக்களை அமைத்து இப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்
இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இரண்டு மாதங்களில் 1 கோடி உறுப்பினர் களை சேர்க்க வேண்டும். இதற்காக சேர்க்கை முகாம்கள் நடத்த உள்ளோம். இதுதவிர, தெரு முனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் மூலம் திமுகவின் வரலாறு, கொள்கை மற்றும் அரசின் திட்டங்கள், மக்களுக்கு அவை அளிக்கும் பயன்கள், பட்ஜெட் திட்டங்களின் பலன் களை எடுத்துக் கூறி அவர்களை திமுகவில் உறுப்பினராக்குவதே எங்கள் பணி.
உறுப்பினர் சேர்க்கையை இயக் கமாக மாற்றி இளைஞர்களை அதிகளவில் சேர்க்க உள் ளோம். இது தவிர, நாடாளுமன்ற தேர்த லுக்கான அடிப்படைப் பணிக ளான பூத் கமிட்டி அமைத்தல், அதற்கு வாக்குச்சாவடி முகவர் களை தேர்வு செய்தல் போன்ற பணிகளையும் விரைவாக முடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தொகுதி வாரியாக ஏற்கெனவே பட்டியல் தயாரித்து அனுப்பப் பட்டது.
அந்த பட்டியலில் உள்ள வர்களை இறுதிசெய்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், சட்டம் அறிந்தவர்களுக்கு அதிக முக்கி யத்துவம் அளிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.