ஏட்டுத் திக்குகளிலிருந்து…

Viduthalai
1 Min Read

 27.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பாஜக அரசால் ரத்து செய்யப்பட்ட முஸ்லிம் இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என கருநாடக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉திருவாரூரில் நடைபெற உள்ள கலைஞர் பிறந்த நாள்  நூற்றாண்டு விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தி டெலிகிராப்:

👉காங்கிரஸ் ஓபிசி பிரிவினரை அவமதித்து விட்டது என பாஜக கூறியதற்கு, லலித் மோடி, மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோர் ஓபிசி பிரிவினரா? அல்லது அவர்களின் பிரதிநிதிகளா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பதிலடி.

👉நாட்டின் பிரதமர் ஒரு கோழை. அவர் தனது அதிகாரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சாடல்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *