விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு அவர்கள் விழுப்புரம் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப் பட்டுள்ள (ஸ்டால் 41) பெரியார் சுயமரியாதை புத்தக அரங்கில் நூல்களை பார்வையிட்டார். விழுப்புரம் நகர திமுக செயலாளர் இர.சக்கரை மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு, நகர கழக செயலாளர் ச.பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.