காரைக்குடி, நவ 4– காரைக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர்
ம.கு. வைகறை தலைமையில், தலை மைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி, மாவட்ட காப் பாளர் சாமி திராவிடமணி, முன் னிலையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட
சி.செல்வமணி தனது வரவேற் புரையில் இயக்கத்தில் உறுப்பினர் களை அதிகமாக முனைப்போடு சேர்ப்பது எனவும், மாவட்டம் முழுக்க ஊர்தியில் பரப்புரை செய்ய வேண்டும் எனவும் தனது வேண்டுகோளை தெரிவித்தார்.
சிறப்புரையாற்றிய தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா. சிகா மணி தனது உரையில், நவம்பர் 5 அன்று திருப்புவனத்தில் நடை பெறக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் மனுதர்ம யோஜனாவா?
குலக்கல்வி எதிர்ப்பு வரவேற்பு பொதுக்கூட்டத்தில் பெருந் திர ளாக பங்கேற்க வேண்டும் எனவும், விடுதலை சந்தாவை புதுப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மாவட்டத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்ட ம.கு. வைகறை தனது உரையில் விடுதலை இதழை அனைத்து தோழர்களும் கட்டா யம் வாங்க வேண்டியதன் அவசி யத்தை எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு தோழரும் தன்னை ஒரு பரப்புரை ஆயுதமாக கொள்ள வேண்டும் என்ற எனவும், நாள் தோறும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக பெரியார் நாள்காட்டியை வைக்க வேண்டும் எனவும், அமைப்பு பணிகளின் வளர்ச்சியில் அனைத்து தோழர்களும் பங் கெடுக்க வேண்டும் எனவும் வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
.மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் நன்றியுரை கூறினார்.
நிகழ்வில் தி.தொ.க செயலாளர் சொ.சேகர், நகர கழக அமைப் பாளர் ஆ.பால்கி, அ.பிரவீன் முத்து வேல் ஆகியோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
விடுதலை சந்தாவை புதுப்பிக்க வேண்டியது மிக அவசியமானது எனவும், ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை விடுதலை கட்டாயம் வாங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 2 தமிழர் தலைவர் அய்யாவின் 91ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவ தெனவும் தீர்மானிக்கப்படுகிறது
அமைப்புப் பணிகளின் வளர்ச் சியில் பொறுப்பாளர்கள் அனை வரும் பங்கெடுக்க வேண்டு
மெனவும் தீர்மானிக்கப்படுகிறது.