அன்னியர் ஆட்சியில் நாம் சூத்திரர், பஞ்சமர் என்றால் சுய ஆட்சியிலும் அப்படித்தான் இருக்க வேண்டுமா? மனுதர்மம் ஒழிய வேண்டும்; நாம் மனிதர்களாக வாழ வேண்டும் என்கிற கவலை இந்த விஞ்ஞானக் காலத்திலாவது நமக்கு ஏற்பட வேண்டாமா? புராணக் காலத்தில்தான் திராவிடன் இழிமகனாக ஆக்கப்பட்டான் என்றால் வெடிகுண்டு, அணுகுண்டு, ஆகாயக் கப்பல், ரேடியோ, எக்ஸ்ரே என்பதாகப் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்திலும் திராவிடன் சூத்திரனாக இருக்க வேண்டுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’