26.03.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம் இளைஞரணி தோழர் சி.நாகராஜ், சி.வேலாயுதம், சி.ஜெகதீசன் ஆகியோரது தந்தை சிவஞானம் (வயது 75) அவர்களின் படத்திறப்பு மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் படத்தினை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.