பெங்களூரு, மார்ச் 28 கருநாடக மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) 2பி என்ற துணைப் பிரிவில் இருந்த இஸ்லாமியர்களுக்கான
4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான பழைய இடஒதுக்கீடு நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 24.3.2023 அன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள் சேர்க்கையில், பொருளா தார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களைச் சேர்க்கவும், ஒக்கலிகர், லிங்காயத்து சமூகத்தினருக் கான இடஒதுக்கீடை தனித்தனியே 2 சதவீ தம் அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர்அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
இஸ்லாமியர்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, பெரும்பான்மை சமூகத்துக்கு வழங்கு வதை நாங்கள் விரும்பவில்லை. இடஒதுக்கீட்டை சொத்து போன்று பங்கிட முடியும் என மாநில அரசு கருதுகிறது. இது சொத்து இல்லை. அவர்களின் உரிமை. அடுத்த 45 நாள்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். நாங்கள் இந்த முடிவை ரத்து செய்வோம். காங்கிரஸ் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஓபிசி பட்டியலில் இருந்து இஸ்லாமியர்களை நீக்கியதற்கு எந்த வொரு அடிப்படை காரணமும் இல்லை. நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க உள்ள நிலை யில், உணர்வுபூர்வமான பிரச்சினைகளை அக்கட்சி எழுப்பியுள்ளது என்றார்.