தட்டச்சர் பணிக்கு…
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தொகுப்பூதியத்தில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்£ர்.
வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். சுற்றுலாத் துறையில் ரூ.20,000 கோடி முதலீட்டை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்.
உயர்வு
சென்னை மாநகராட்சியின் வீடு உட்பட அனைத்து கட்டடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக ஒலி
அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் மற்றும் கண் கூசும் விளக்குகள் பொருத்தப்பட்ட 639 பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று விளக்கம் அளிக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலைப்பேசி…
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில் செயலிழக்க வைத்த அல்லது துண்டிக்கப்பட்ட செலபோன் எண்கள் குறைந்தபட்சம் 90 நாட்கள் வரை புதியவர்களுக்கு ஒதுக்கப்படாது என உச்நீதிமன்றத்தில் டிராய் தகவல்.