சாலியமங்கலம் பெரியார் பெருந் தொண்டர் துரைராஜன் அவர்களின் மருமகனும், திராவிடர் கழகத் தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா ளருமான வழக்குரைஞர் த.முத்தப்பா அவர்கள் நேற்று (28.03.2023) இரவு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர்தம் வாழ்விணையர் மல்லிகா, மகன் அலெக்ஸ், மகள் ஜான்சிராணி உள்ளிட்ட குடும் பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் நமது ஆறுதலைம், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கி றோம்.
29.03.2023 – கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: இறுதி ஊர்வலம் இன்று (29.03.2023) மாலை 3.மணிக்கு சாலியமங்கலத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.