சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுவதாகவும், 58 வயதிலேயே பணி ஓய்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதைத்தான் உறுப்பினர் சதன் திருமலைக்குமாரும் அவையில் பேசினார். முதலமைச்சருடன் கலந்து பேசி, போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகங்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இக்கழகங்கள் சீரழிந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். 2006-_11 திமுக ஆட்சியில் 48,898 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 38,399 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் 2016-_2021 வரையிலான 5 ஆண்டு ஆட்சியில் ஒரு நியமனம் கூட நடைபெறவில்லை. பணி ஓய்வையும் 60 வயதாக உயர்த்தினார்கள். அதனால் ஏற்படும் நிதி சுமை குறித்து கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books