பக்தியின் பெயரால் பால் பாழ் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகமாம்

1 Min Read

சென்னை, மார்ச் 30- திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி சிறீவாரி வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, சிறீவாரி வெங்கடா சலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

 வருகிற 1-ஆம்  தேதி (1.4.2023) உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று ஒழியவும் 108 திவ்ய தேசங்களுக்கு சென்று அனைத்து (புண்ணிய நதி களாம்) நதிகளிலும் நீராடி பூஜிக்கப் பட்டு வந்த சிறீராமச்சந்திர மூர்த்தி சொர்ண ராம பாதங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அர்ச்சனை  என்று –  அதற்கான ஏற்பாடுகளை சிறீஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.

மறுநாள் 2-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது என்கிறனவர். அன்றைய தினம் காலை 8 மணிக்கு விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ அபிஷேகம் இது மட்டு மல்லாமல் 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு மற்றும் திருமஞ்சனமும்,  10 மணிக்கு வாசுகி மனோகரன் குழுவினரின் சிறீராமனும், அனுமனும் என்ற தலைப்பில் இசைசொற்பொழிவும் நடக்குமாம். மதியம் 12.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபசாரம், சாற்றுமுறை மற்றும் திருவாராமனம் ஆகியவை நடக்கிறாம்.

பொருளாதார சிக்கலில் மக்கள் படும் இன்னல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாது – பால் தட்டுப்பாடு நாட்டில் நிலவுவதையும் கவனத்தில் கொள்ளாது- 2000 லிட்டர் பால் மற் றும் இதரப் பொருட்களைப் பாழாக் குவதா? என்ற கேள்வி பக்தர்களி டையேகூட நிலவுகின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *