டர்பன், நவ. 4- தென்னாப் பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, 2ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.
இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157ஆ-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இவ் விழாவில் நேரில் பங்கேற் பதற்காக டர்பன் நகருக்கு சென்று மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ. சத்யா, துர்கா சத்யா ஆகியோ ரும், மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களும் கலந்து கொள் கிறார்கள்.
உலகத் தமிழ் பண் பாட்டு இயக்கத்தின் தலை வர் டாக்டர் மிக்கி செட்டி, கிளேர்வுட் தமிழ்க் கல்வி யாலயத்தின் தலைவர் மாஸ்டர் ஹூகான் மெர்லின் ரெட்டி மற்றும் தமிழ்ச் சங்க செயல்பாட் டினர் ராஜராஜன் ஆகி யோர் விழாவில் பங்கேற் கிறார் கள். இந்நிகழ்வில் பல் வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.