30 நாள் பயணம் 57 பொதுக் கூட்டங்கள். 90 வயது இளைஞராக சுற்றிச் சுழன்று வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக பெரியார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து வரும் நமது தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலுக்கு வருகை தந்தார்.
காரைக்கால் மண்டல திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி களின் பொறுப்பாளர்களோடும், காரைக்கால் மக்களோடும் வரவேற்று மகிழ்ந்தோம்.
காரைக்கால் மண்டல கழக தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்தோடு தலைவருக்கு எடைக்கு எடை ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பழங்களைக் கொடுத்து மகிழ்ந் தார். அதனை இளைஞர் அணி செயலாளர் லூயிஸ் பியர் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து தலைவரிடம் பணமாக கொடுத்தார். எத்தனை இனிமையான தருணம் அது!
மண்டல தலைவர் பழம் வழங்கினார், மண்டல இளைஞரணி செயலாளர் பழத்திற்கு பணம் வழங்கினார். பெற்றுக்கொண்ட தலை வர் அதனை பெரியார் உலகத்திற்கு வழங் கினார்.
இதுதான் பெரியாரின் பொருளாதாரக் கோட்பாடு!
புதுச்சேரியில் நடைபெறும் அதிகாரி களின் ஆட்சியை அம்பலப்படுத்தினார். சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை – ஆளுநரின் அதிகாரத்தை தவிர்த்து தனி மாநிலத் தகுதி எப்படி பெறுவது என ஆலோ சனை வழங்கினார்.
காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையின் அவல நிலையினை இந்த அரசு மாற்ற வேண்டும் என காரைக்காலில் புறக் கணிப்பை – ஒரு தீர்மான கோரிக்கையை முன் வைத்தார்.
ஃப்ரஞ்ச் கலாச்சாரத்தோடு ஒன்றிய புதுச் சேரியின் கலாச்சாரத்தையும், பு(து)ச்சேரியின் அரசியலையும் (பொலிதிகல்) தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.
10 மணிக்குக் கூட்டம் முடிந்து செய்தி யாளர்கள் சந்திப்பு, பிறகு கழகத் தோழர்க ளோடும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணி கட்சிகளின் பொறுப்பாளர்களோடும், சந்திக்க வந்த காரைக்கால் மக்களோடும் பேசி விடை பெற்றார். மயிலாடுதுறையில் தங்குவதற்காக போகும் வழியில் தரங்கம் பாடிக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி, காரைக்கால் மண்டல தலைவர் கொடுத்து அனுப்பிய இரவு உணவை உண்டு பயணத் தோழர்களோடு உரையாடிவிட்டு.12.15 மணியளவில் மயிலாடு துறை மாவட்ட கழகத் தோழர்கள் கொடுத்த வரவேற்பை பெற்றுக் கொண்டு இரவு 12.30 மணிக்கு மேல் ஓய்வுக்குச் சென்றார். 29 ஆம் தேதி தொடங்கிய பயணம் 30 ஆம் தேதி நள்ளிரவிற்கு மேல் முடிவடைந்தது.
90 வயதில் இவருக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது? இவரது வாழ்வியலை நாம் பாடமாகக் கற்க வேண்டும்!