வெள்ளலூர், மார்ச் 31- கோவை வெள்ள லூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 25.3.2023 அன்று மாலை 6.00 மணியளவில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட் டம் நகர தலைவர் தி.க.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் தி.க காளிமுத்து அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் தி.க செந்தில் நாதன் ,மாவட்ட காப்பாளர் ம.சந் திரசேகர், மண்டல செயலாளர் ச.சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புலியகுளம் க.வீரமணி தொடக்க உரை யாற்றினார். தஞ்சை இரா.பெரியார் செல்வம் சிறப்புரையாற் றினார்.
மாநில இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் ஆ. பிரபாக ரன் வெள்ளலூர் பேரூராட்சியின் மேனாள் தலைவர் இ.வி.பி. பால சுப்ரமணியம்,தி.மு.க நகர செயலா ளர் கே.ராஜு, ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி கருத்துக் களை தெரிவித்தனர்.
தி.முக நகர்மன்ற உறுப்பினர்கள் கலை.காளீசுவரி, பேக்கரி கனக ராஜு, பெருமாள், குணசுந்தரி, பச்சையம்மாள், நித்தியாதேவி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்ட இளை ஞரணி செயலாளர் ச.சசிக்குமார், மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் கா.கவுதம், நகர இளைஞ ரணி தலைவர் ஆ.பெரியார் மணி, தெற்கு பகுதி செயலாளர்
தெ. குமரேசன், பிள்ளையார்புரம் ஆனந்த், ஆ.அருண், மகேந்திரன் மற்றும் திமுக உறுப்பினர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வு இறுதியில் தி.க. ரவி நன்றி கூறினார். நிகழ்வின் துவக்கத்தில் நிமிர்வு கலைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.