கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் – அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு, நமது உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக் கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை என்கின்ற உறுதியோடு, சோம்பேறிக் கூட்டத்திற்கு எதிராக எவன் போர்தொடுக்க முனைந்து நிற்கிறானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாகஆகிறான்.
(‘குடிஅரசு’ 13-3- 1938)