மாநிலங்களவையில் இரா.கிரிராஜன் கேள்வி!
புதுடில்லி, ஏப்.3- மாநிலங்கள வையில் தி.மு.க. உறுப்பினர் இரா.கிரிராஜன் எழுப்பிய கேள்வியும் அதற்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும் வருமாறு:-
சென்னை எம்.ஆர்.டி.எஸ். மெட்ரோ இணைப்பு குறித்து 2018இல் வல்லுநர்கள் மேற் கொண்ட ஆய்வு குறித்த தகவல்கள் மற்றும் அதன் விவரங்கள்? சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னத்திடம் எம். ஆர்.டி.எஸ். ரயில் வழித்தடத்தையும், நிலையங் களை யும் ஒப்படைப்பதற்கும், இணைப் பதற்கும் எம்.ஆர்.டி.எஸ். மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இடை யில் தெற்கு ரயில்வே கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தியுள் ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் எம். ஆர்.டி.எஸ்.யை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதை விரைவுபடுத்த தெற்கு ரயில்வே எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள். தற்போது பணியி லுள்ள எம்.ஆர்.டி.எஸ். ஊழியர் களின் நலன்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக் கைகள் என்ன? என்று மாநிலங் களவை உறுப்பினர் கிரிராஜன் கேட்டார்.
இதற்கு ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சிறீஅஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு:-
முதல் அறிக்கை தயார் செய்யப்பட்டு சபையில் வைக்கப் பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே அமைச்சகம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஒரு ஆலோசகரை நியமித்து ஆய்வு மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. அதன்படி இறுதி அறிக்கை பிப்ரவரி, 2018இல் சமர்ப்பிக்கப் பட்டது.
இப்பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச் சக அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை கடற்கரைக்கும், சென்னை எழும்பூ ருக்கும் இடையிலான 4ஆவது பாதை (4 கி.மீ.). கட்டுமான பணிகள் முடிந்த பின்னரே சென்னை மெட்ரோ இரயில் (CMRL) மற்றும் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS), இரண்டையும் இணைக்கும் திட் டத்தை தொடங்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் 2020-2021இன் கீழ் சென்னை கடற்கரை மற் றும் சென்னை எழும்பூர் இடையே 4ஆவது பாதையில் பணிக்கு ரூபாய் 279.80 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்பணி 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதி அளிக்கப்பட்டு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (MRTS) பிரிவில் தற்போது பணிபுரி யும் அனைத்து ரயில்வே ஊழியர் களும், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் மற்ற பிரிவுகளில் தொடர்ந்து பணியாற் றுவார்கள். இவ்வாறு பதில ளித்தார்.