புதுடில்லி,நவ.5-கடந்த சில ஆண்டு களாக நாட்டின் தலைநகர் மண்டல மான டில்லியில் விழாக்கள் மற்றும் குளிர் காலங்களில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டிலும் வழக்கம் போல காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகி யுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.3 மற்றும் 4 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப் பட்டது.
இதுகுறித்து டில்லி அமைச்சர் கோபால் ராய் மேலும் கூறுகையில், “டில்லி காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறும் வேளையில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (பூபேந்தர் யாதவ்) எங்கே? பாஜகவுக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லையா? மாசு பாட்டை ஏற்படுத்தக்கூடிய லாரிகள், வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் நிறுத்தம் என டில்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஒன்றிய அரசும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இதுகுறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்தவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.