ஜெகதாப்பட்டினம், ஏப். 3- ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் றி.பால முருகன் அவர்களின் தலை மை யில் மீனவர் சங்க உறுப் பினர்கள் சிறப்புக்கூட் டம் 31.03.2023 அன்று மீனவர் சங்க அலு வலகத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் மீனவர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது எனவும், முழு ஒத்து ழைப்பு வழங்குவது என் றும் முடிவு செய்தனர்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜெகதாப்பட்டினம் ச.குமார் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்று திராவிடர் கழ கம் நடத்தும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் குறித்து உரை யாற்றினார்.