தானே, ஏப். 3- லஞ்சம் கேட்டதால் ஆத்திர மடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசி எறிந்தார்.
மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாக கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவல கத்திற்கு வந்தார். தொடர்ந்து முழக்கமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இது தொடர்பான காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.