சென்னை, ஏப். 5- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தாக்கல் செய்த மனு: எனக்கு, 10 வயது இருக்கும் போது, கணையம் பாதிக்கப்பட்டது. இன்சு லின் சுரப்பு குறைந்தது. அதனால், தினசரி இரண்டு முறை இன்சுலின் ஏற்றப்படுகிறது. ‘நீட்’ தேர்வில், 137 மதிப்பெண் பெற்றேன். மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள, எனக்கு அழைப்பு இல்லை. ‘டைப் 1’ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு கோரினேன். எந்த பதிலும் இல்லை.
‘டைப் – 1’ நீரிழிவு நோயால் பாதித்தவர் களை, இயலாதவராக கருதி சான்றிதழ் வழங்க வேண்டும்; சிறப்புப் பிரிவாக கருதி, மருத்துவக் கல்வியில் அவர் களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
எனக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண் டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட் டுள்ளது. மனு, நீதிபதி தண்டபாணி முன், விசார ணைக்கு வந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஏராள மானோர் இருக்கும்போது, எப்படி ஒதுக்கீடு வழங்க முடியும் என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ‘இதுபோன்ற ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், ஒன்றிய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என, தேர்வுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைய டுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஒன்றிய, மாநில அரசுகளிடம் மனு தாரர் முறையிடலாம் என, அறிவு றுத்தினார்.