கோயம்புத்தூர், நவ. 5 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சூலூரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில ளித்து பேசிய அவர், “யாருடைய உரிமை களும் பறிக்கப்படாத வகையில் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளி வாக தெரிவித்துவிட்ட பிறகு, ஒரு மாநில அரசு தண்ணீர் தர மறுத்தால் அதனை பெற்றுத்தர வேண்டிய கடமை ஒன்றிய அர சுக்கு தான் உள்ளது. ஆனால் அதனை செய்யாமல் மக்களை பிரித்து அரசியல் செய்யவே ஒன்றிய பாஜக அரசு விரும்பு கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும்” என்றார்.