முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார்.
அகவை 80-அய் தாண்டிய அண்ணன் சிதம்பரமும், அண்ணன் வைகோவும் மூலைமுடுக்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதன் அருமையை விளக்கி வருகின்றனர்.
87 வயதான நம் கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் துரைமுருகன் அவர்களும், 28 வயதே ஆன அவிநாசி கழக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியும் பம்பரமாகக் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் பணியாற்றி வருகிறார்கள்.

