விழுப்புரம், ஏப்.12 ‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துரோகத்திற்கு பழனிசாமி துணை போகிறார்,” என இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா.முத்தரசன் பேசினார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா. முத்தரசன் வளவனுாரில் பிரச்சாரம் செய்தார்.
‘டில்லியில் ஆட்சி நடத்தும் கட்சி, ஜனநாயகத்தை முற்றிலுமாக நிராகரித்து சர்வாதிகாரப் பாதையில் நடக்கிறது.
தேர்தல் ஆணைய தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
நாட்டில் அதிகமாக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது மிக குறைவு. மோடி, அமித் ஷாவின் துரோகத்திற்கு பழனிசாமி துணை போகிறார். பழனிசாமி நாகரிகமாகப் பேச வேண்டும். முதலமைச்சரை பார்த்து அநாகரிமாக பேசுவது தவறு. இப்படிப்பட்ட தலைவர் தேவையா என வாக்காளர்கள், நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மதவாதப் பேச்சு!
சிறுபான்மையினர் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற தயாராக இருக்க வேண்டுமாம்… மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மதவாத பேச்சு.

