காரைக்கால், ஏப்.12 காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்தது. சிறைபிடித்த 12 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.
ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த இந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
மேற்குவங்காளம்
காவல்துறை தலைமை இயக்குநர் உள்பட
12 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்
தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா,ஏப்.12 மேற்குவங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 23ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, தேர்தலை வன்முறை உள்பட எந்தவித பிரச்சினைகளும் இன்றி நடத்த தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் உள்பட 12 பேரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காளத்தில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

