கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.4.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டை காவி மயமாக்க நினைக்கும் பாஜகவிற்கு துணைபோகும் பழனிசசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு. கொள்கைகளை, ஆட்சியின் திட்டங்களை முன்வைத்து பேசுகிறார் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் உரிமையை வெகுவாக பாதிக்கும், தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீடு: ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் (பிசி) அமைப்புகள் 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கோருகின்றன; போராட்டங்கள் நடத்த போவதாக எச்சரிக்கை

* எவ்வித புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றுவதா? உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக பரபரப்பு கடிதம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* வாக்காளர் சிறப்பு திருத்தம் (எஸ்அய்ஆர்) என்பது வங்காளத்தில் “பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவரும்” நோக்கத்துடன் அரங்கேற்றப்படும் ஒரு “பெரும் மோசடி” என்று மம்தா காட்டம். இந்த நடைமுறையை அமல்படுத்துபவர்கள் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *