சென்னை, ஏப். 5- உலக பெருங் குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான மார்ச் 2023-இல் அது தொடர்பாக, ‘தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் வெல்லக் கூடியது’ என்ற தலைப் பில் மூன்று முக்கிய கவனம் செலுத்தக்கூடிய பகுதிகளில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச் சியை சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தியது.
இந்த மூன்று நாள் மருத்துவ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை குடல் இரைப்பை நிபுணர் டாக்டர் ஆதர்ஷ் சுரேந் திரநாத், பெருங்குடல் புற்று நோய்க்கான அறிகுறிகளை விரிவாக எடுத்துரைத்தார். குடல் இரைப்பை அறுவைசிகிச்சை நிபு ணர் டாக்டர் ராஜ்குமார் ரத்தின சாமி, அறுவை சிகிச்சை நடை முறை, அதன் நன்மைகளை விளக் கினார். மேலும் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜோசப் டோமி னிக், 4-ஆவது நிலை பெருங்குடல் புற்றுநோய்க்குகூட எவ்வாறு முழு மையான சிகிச்சையளிக்க முடி யும்?, எனப் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளக்கினார்.
டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை நிறுவனர், டாக் டர் டி.ஜி. கோவிந்தராஜன் இது குறித்து கூறுகையில், “இன்றைய வேகமான உலகில், துரித உணவு மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொள்வது, அவற்றில் உள்ள பதப்படுத்திகள், தீங்கு விளை விக்கும் பொருட்கள் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் பரவ லைத் துரிதப்படுத்துகின்றன. போதுமான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்பதும், நமது வேர்க ளுக்குத் திரும்புவதும் அவசியம். புகைபிடிப்பது, மது அருந்துவதைத் தவிர்ப்பது புற்றுநோய்களைத் தடுப்பதில் பெருமளவு கைகொ டுக்கும்” என்றார்.