இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் வெற்றி வாகை

1 Min Read

ஜெயங்கொண்டம், ஏப். 11– 18.11.2025 அன்று ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடை பெற்றது.

அப்போட்டியில் 158 மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப் படுத்தினார்கள். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல், ஓவியம் மற்றும் பொது அறிவு போன்ற பாடங்களில் தேர்வு நடைபெற்றது.

அத்தேர்வில் 65 மாணவர்கள் இரண் டாம் சுற்று தேர்வு செய் யப்பட்டனர். 3.2.2026 அன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில்  65 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 5 மாணவர்கள் வெற்றியாளர் களாக தேர்வு செய்யப் பட்டனர்.

இறுதியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் சாய்சக்திவேல் மாநில அளவில் நான்காம் இடத்தில் வெற்றி பெற்று ரூ. 1,000 பண பரிசும் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி லிதன்யா மாநில அளவில் எட்டாம் இடத்தில் வெற்றி பெற்று ரூ. 700 பண பரிசும் வழங்கப்பட்டது. மேலும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி பிரதீபா.பா, ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஜாக்சனா, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி வாணிசிறீ ஆகிய இவர்களுக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றிகள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *