கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம், நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் முடிவில் பதவி விலகல்: குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.

* சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மெட்ரோ ரயில்’ பிரச்சாரம்: ‘திராவிட மாடல்’ சாதனைகளை விளக்கி நேரடி வாக்கு சேகரிப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எம்பியாக பதவியேற்பு: நேற்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

* தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் கண்டனம். 50 சதவீத எண்ணிக்கை அதிகரிப்பு என்ற பெயரில் பாஜக சதி செய்கிறது என குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்ததாக அகிலேஷ் (யாதவ்) குற்றச்சாட்டு; பாஜக அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித் துறை போன்ற ‘நிறுவனங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதாக’ குற்றச்சாட்டு.

தி இந்து:

* பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் அரசின் முயற்சி தேர்தல் நடத்தை விதிமீறல், காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு.  இட ஒதுக்கீடு சட்டம், தொகுதி மறுவரையறை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளது காங்கிரஸ்: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கான மூன்று நாள் சிறப்பு அமர்வுக்கு முன்னதாக, இந்தியா அணி கூட்டத்தை கார்கே கூட்டவுள்ளார்;

தி டெலிகிராப்:

* ‘விஸ்வகுரு’ ஆசிம் முனீர்? பாகிஸ்தான் அமைதித் தூதராக மாறியுள்ள சூழல், இந்தியா பின் தள்ளப்பட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மத்திய கிழக்கின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் ஒரு களமாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் எதிர் வினையில் அப்பட்டமான ‘புளித்த திராட்சை’ மனப்பான்மை தென்படுகிறது.

* நர்மதை ஆற்றில் 11 ஆயிரம் லிட்டர் பால் ஊற்றி சடங்கு:  நீர் தூய்மை படுத்துதல் என்ற பெயரில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள நர்மதா ஆற்றில் மதச் சடங்கிற்காக 11 ஆயிரம் லிட்டர் பால் ஊற்றப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *