இலக்கிநாயக்கன்பட்டி செ. லட்சுமணன் பணி நிறைவு – பாராட்டு விழா

3 Min Read

திருப்பத்தூர், ஏப். 11- திருப்பத்தூர் மாவட்ட கழக  இலக்கிநாயக்கன்பட்டி கிளை செயலாளர் செ. லட்சுமணன் இந்திய அஞ்சல் துறையில் பணி யாற்றி  தற்போது ஓய்வு பெற்றார்.அதையொட்டி  அவருக்கு  திருப் பத்தூர் மாவட்ட கழக சார்பில் 05.04.2026,காலை11.00 மணியளவில் இலக்கி நாயக்கன்பட்டியுள்ள அவர் இல்லத்தில் சிறப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்வு  கே. சி. எழிலரசன் தலைமையிலும், பெ. கலைவாணன்  (மாவட்டச் செயலாளர்) வரவேற்பிலும் நடைபெற்றது.

செ. லட்சுமணன் 1983 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இந்திய அஞ்சல் துறையில் கிளை அஞ்சலக அதிகாரியாகவும் அதன் பிறகு பன்முகதிறன் ஊழியர் (MTS) ஆக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றார்.

செ.லட்சுமணன் தான் பணி செய்யும் காலந்தொட்டு  தந்தை பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கழக இயக்கப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர். அதன் காரணமாக தான் குறைந்த படிப்பு படித்தாலும், தனக்கு கிடைத்த வருவாயில் தன் பெண் பிள்ளைகள் இரண்டு பேர், ஒரு ஆண் பிள்ளைகளை உயர் பட்டப்படிப்பு படிக்க வைத்து வேலை வாய்ப்புகளை  பெற்றச் செய்து  தன்னை விட உயர்ந்த நிலைக்கு உயர்த்தியவர். இதற்கு எல்லாம்  தந்தைபெரியார் கொள்கைகளை பின்பற்றியதால் ஏற்ப்பட்ட விளைவு என்கிறார். கழகத்தின் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கலந்துக் கொண்ட பிறகு கருப்புச் சட்டையுடன் அலுவலகத்தில் சென்றால், அங்கே இருக்கும் உயர் அதிகாரி ஏன் கருப்புச் சட்டையுடன் வந்தாய் என்று கேட்பார். “மெமோ” கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவார். அதையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு கொள்கையில் உறுதியாக இருந்தேன் என்கிறார்.

அந்த கொள்கை உறுதியுடன் ஒன்றிய அரசு பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு, அரசு பணியில் தான் ஓய்வு, சமூகப் பணியில் ஓய்வில்லை. ஆகவே தொடர்ந்து இயக்கப்பணிகளில் அதி வேகத்துடன் செயல்பட  வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவருக்கு தந்தை பெரியார் படத்தையும், ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை புத்தகமும் மேலும் வெள்ளைவேட்டியும், கருப்புச்சட்டையும் வழங்கி சிறப்பு செய்தார் மாவட்டத் தலைவர் கே. சி.எழிலரசன். பங்கேற்ற அனைவரும் அவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இந் நிகழ்வை, தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சார மேடையாகவே பயன்படுத்தி உரையாற்றினார் அண்ணாசரவணன் (மாநில பகுத்தறிவாளர் துணைச் செயலாளர்)

மேலும், எம். ஞானபிரகாசம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) எம. என் அன்பழகன் (விடுதலை வாசகன் வட்ட அமைப்பாளர் )

வெ. அன்பு (மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர்) கோ. திருப்பதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்)  பெ. ரா.  கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) ஆகியோர் லட்சுமணனின் கொள்கை உறதியை பாராட்டி பேசினார்கள்.

இந் நிகழ்வில்  சி. ஏ. சிற்றரசன் (மாநில இளைஞரணி செயலாளர்) அன்புச் சேரன் (வாணியம்பாடி நகரத் தலைவர்) இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்)

கே. மோகன் (மாவட்ட தலைவர்  பெ.கட்டுமான தொழிலாளரணி)   க.நிரஞ்சன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) கோ. சங்கர் (சுந்தரம்பள்ளி கிளைத் தலைவர்) சரவணன் (இலக்கி நாயக்கன்பட்டி கிளைத்தலைவர்) கோ. சங்கர் (சுந்தரம்பள்ளி ஒன்றியத் தலைவர்) அக்ரி அரவிந்த் (நகர இளைஞரணி செயலாளர்)  சந்தோஷ் (காக்கங்கரை கிளைத் தலைவர்) ப. அன்பு (மாவட்ட மாணவரணி செயலாளர்) மற்றும் ஊர் நாட்டாமை, ஊர் பொது மக்கள் அனைவரும் பங் கேற்றனர்.

இறுதியில் செ. லட்சுமணன்  (இலக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்)  தனக்கு சிறப்பு செய்து வாழ்த்திய  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இயக்கப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *