சென்னை, ஏப். 11– தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 5 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கி கடந்த 6ஆம் தேதி வரை நடந்தது. 4 நாட்கள் விடுமுறையான நிலையில் 4 நாட்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.
4,023 வேட்பாளர்கள்
அதன்படி, மோத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7ஆம் தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதை தொடர்ந்து கடந்த 8 மற்றும் 9ஆம் தேதி காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று (10.4.2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் 79 பேர் களத்தில் உள்ளனர். இதனால், கரூர் தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று, குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
மாவட்ட வாரியாக இறுதி வேட்பாளர்கள்
- சென்னை 419 பேர் (16 தொகுதி) 2. திருவண்ணாமலை 156 பேர் (8 தொகுதி) 3. திருவள்ளூர் 160 பேர் (10 தொகுதி) 4. காஞ்சிபுரம் 65 பேர் (4 தொகுதி) 5. செங்கல்பட்டு 113 பேர் (7 தொகுதி) 6. ராணிப்பேட்டை 65 பேர் (4 தொகுதி) 7. வேலூர் 65 பேர் (5 தொகுதி) 8. கிருஷ்ணகிரி 79 பேர் (6 தொகுதி) 9. திருப்பத்தூர் 74 (4 தொகுதி) 10. கள்ளக்குறிச்சி 72 பேர் (4 தொகுதி) 11. விழுப்புரம் 132 பேர் (7 தொகுதி) 12. கடலூர் 113 பேர் (9 தொகுதி) 13. தருமபுரி 83 பேர் (5 தொகுதி) 14. கரூர் 166 பேர் (4 தொகுதி) 15. சேலம் 193 பேர் 11 தொகுதி) 16. ஈரோடு 118 பேர் (8 தொகுதி) 17. திருப்பூர் 116 பேர் (8 தொகுதி) 18. கோயம்புத்தூர் 183 பேர் (10 தொகுதி) 19. திருச்சி 171 பேர் (9 தொகுதி) 20. நீலகிரி 18 பேர் (3 தொகுதி) 21. அரியலூர் 34 பேர் (2 தொகுதி) 22. பெரம்பலூர் 30 பேர் (2 தொகுதி) 23. மயிலாடுதுறை 43 பேர் (3 தொகுதி) 24. நாகப்பட்டினம் 31 பேர் (3 தொகுதி) 25. தஞ்சாவூர் 94 பேர் (8 தொகுதி) 26. திருவாரூர் 46 பேர் (4 தொகுதி) 27. தேனி 65 பேர் (4 தொகுதி) 28. திண்டுக்கல் 115 பேர் (7 தொகுதி) 29. மதுரை 129 பேர் (10 தொகுதி) 30. ராமநாதபுரம் 66 பேர் (4 தொகுதி) 31. விருதுநகர் 135 பேர் (7 தொகுதி) 32. தூத்துக்குடி 92 பேர் (6 தொகுதி) 33. கன்னியாகுமரி 85 பேர் (6 தொகுதி) 34. சிவகங்கை 71 பேர் (4 தொகுதி) 35. தென்காசி 95 பேர் (5 தொகுதி) 36. திருநெல்வேலி 90 பேர் (5 தொகுதி) 37. புதுக்கோட்டை 109 பேர் (6 தொகுதி) 38. நாமக்கல் 132 பேர் (6 தொகுதி).
இவ்வாறு தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

