பெண் வேடமிட்டு ஆடும் கிரிமினல் பின்னணியுள்ள சாமியார்!

1 Min Read

அரியானா மாநிலம் ஜிந்த பகுதியில் உள்ள ‘மாதாதீ சதானந்த மகாராஜ்’ எனும் சாமியார், பெண் போல் வேடமிட்டு குதித்து ஆடுவதன் மூலம் பக்தர் களுக்கு அருள் பாலிப்பதாக அறியப்படுகிறார். டில்லி மற்றும் அரியானா பகுதிகளில் இவருக்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது.

இவரைப் போன்றே பெண் வேடமிட்டு ஆடிய கிரிமினல் பின்னணி கொண்ட சாமியார்களைப் பற்றியும் பார்ப்போம்.

ஞாயிறு மலர்

‘ஆசாராம் மற்றும் அவரது மகன் சாயி கிருஷ்ணா இருவரும் ஆரம்ப காலத்தில் இதே போல் பெண் வேடமிட்டு ஆடி மக்களைக் கவர்ந்தவர்கள்’ என்பது பலருக்குத் தெரியாது. ஆசாராம் தனது ஆசிரமத்தில் பணிபுரிந்த சிறுமி மற்றும் பெண் என இருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்னர், சாட்சி கூறவிருந்த ஆசிரம காவலாளி மற்றும் ஊடகவியலாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக ‘இரட்டை ஆயுள் தண்டனை’ பெற்றார். சாயி கிருஷ்ணாவும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார்.

சாமியார்கள் பெரும்பாலும் மக்களைக் கவர விதவிதமான வேடங்களை அணிவதும், அதன் மூலம் மோசமான செயல்களைச் செய்வதும்  தொடர்கதையாகி வருகிறது  எனவே, மக்கள் சாமியார்கள்  முன்பு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூடநம்பிக்கைக்கு அடிமையாகக் கூடாது.

  • • •

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ராமச்சந்திரா காட் பகுதியில் இந்த 32 வயது அமெரிக்கப் பெண் கஞ்சா போதையில் நாகா சாமியார்களோடு கூத்தடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  2022 ஆம் ஆண்டிலேயே இவரது விசா காலாவதியாகி விட்டது. அப்படி இருந்தும் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *