5.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராமன் பிறந்த நாள் விழாவில், கோட்சே படம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் அய்தராபாத் காவல் துறையில் புகார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும்’, என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காந்தியை கொன்றது கோட்சே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தடை குறித்த வரலாற்று செய்திகள், என்.சி.இ. ஆர்.டி. 12-ஆம் வகுப்பு நூல்களில் இருந்து நீக்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறைக்கு பா.ஜ.க. தான் காரணம் என்று முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி உள்ளார்.
– குடந்தை கருணா