தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அய்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரிப்பதற்காக நேற்று (9.4.2026) காலை 10 மணிக்கு மேற்கு மரியநாதபுரம் – மக்கள் மன்றம் அருகில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், வருகை தந்தார். வேட்பாளர் அதே பகுதியில் ஒவ்வொரு தெருவாகப் பரப்புரை செய்தபடி வந்து கொண்டிருந்தார். அந்த இடைவேளையில், கழகத் தலைவர் வாகனத்திலேயே காத்துக் கொண்டிருக்கும் போது, தி.மு.க.வைச் சேர்ந்த இணையர்கள், தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, தங்களது பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு கழகத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவரும், ‘இனியா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்து, மகிழ்வித்தார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 8.4.2026 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழகத் தோழர்களிடம் ஆதரவு திரட்டினார். வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

