‘இனியா’ என்று பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்!

1 Min Read

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அய்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரிப்பதற்காக நேற்று (9.4.2026) காலை 10 மணிக்கு மேற்கு மரியநாதபுரம் – மக்கள் மன்றம் அருகில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,  வருகை தந்தார். வேட்பாளர் அதே பகுதியில் ஒவ்வொரு தெருவாகப் பரப்புரை செய்தபடி வந்து கொண்டிருந்தார். அந்த இடைவேளையில், கழகத் தலைவர் வாகனத்திலேயே காத்துக் கொண்டிருக்கும் போது, தி.மு.க.வைச் சேர்ந்த இணையர்கள், தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, தங்களது பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு கழகத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவரும், ‘இனியா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்து, மகிழ்வித்தார்.

தமிழ்நாடு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 8.4.2026 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழகத் தோழர்களிடம் ஆதரவு திரட்டினார். வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *