ஒன்றிய அரசு நிறுவனங்களான இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு (NABARD) வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய வேலைவாய்ப்பு அறிவிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நசுக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புள்ளிவிவரங்கள் காட்டும்
உண்மை நிலை
- இந்திய ரிசர்வ் வங்கி – அலுவலக உதவியாளர் பணி (2025):
மொத்த பணியிடங்கள்: 572
27% இட ஒதுக்கீட்டின்படி கிடைக்க வேண்டியவை: 154 இடங்கள்
உண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளவை: 83 இடங்கள் மட்டுமே.
பாதிப்பு: இங்கு ஓபிசி பிரிவினருக்கு வெறும் 14.51% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, தகுதியான 71 இடங்கள் மறுக்கப்பட்டு உள்ளன.
- நபார்டு (NABARD) – வளர்ச்சி உதவியாளர் பணி:
மொத்த பணியிடங்கள்: 159
27% இடஒதுக்கீட்டின்படி கிடைக்க வேண்டியவை: 43 இடங்கள்
உண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளவை: 26 இடங்கள் மட்டுமே.
இங்கு ஓபிசி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 16.35% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 40% இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளில் சில முக்கிய முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது:
பிரித்தாளும் முறை
மொத்த காலிப்பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், அலுவலக வாரியாக அல்லது மண்டல வாரியாக பணியிடங்களைப் பிரித்துக் காட்டுவதன் மூலம் இடஒதுக்கீடு விகிதத்தைக் குறைக்கின்றனர்.
ரோஸ்டர் (Roster) முறைகேடு
‘Post-based roster’ எனப்படும் பணியிட அடிப்படையிலான கணக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தி, ஒபிசி பிரிவினருக்கான வாய்ப்புகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகின்றன.
பொதுப் பிரிவு பாதிப்பில்லை
பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் குறைக்கப்படும் வேளையில், பொதுப் பிரிவினருக்கான இடங்கள் எவ்வித பாதிப்புமின்றி பராமரிக்கப்படு கின்றன.
ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் மிக உயரிய நிறுவனமே இத்தகைய அரசியலமைப்புச் சட்ட மீறலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகளை உடனடி யாக மறுஆய்வு செய்து, 27% இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தி புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது பேச்ச ளவில் மட்டுமே எஞ்சிவிடும் என்றும் சமூக நீதி ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
சமூகநீதியை அழிக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கும் – அதன் அடமானப் பொருளாகிய அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் பாடம் கற்பிப்பீர்!
வெல்லட்டும் உதயசூரியன்!
கிடைக்கட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள்!

