சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம்!
புதுடில்லி, ஏப்.6 சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக் கப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.
இந்த மாற்றம் நடப்பு கல்வியாண்டி லேயே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி, இந்த அறி விப்பை வெளியிட்ட உடனேயே, தாங்களும் அதையே பின்பற்றப் போகிறோம் என்று உத்தரப் பிரதேச மாநில வாரியமும் அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் மத்தி யக் கல்வி வாரியமும், மாநிலங்கள் அளவில் மாநிலக் கல்வி வாரியங்களும் செயல் பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்திற்கான (Central Board of Secondary Education – CBSE) பாடத்திட்டங்களை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான ‘என்சிஇஆர்டி’ வகுத்தளித்து வருகிறது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என்சிஇஆர்டி-யின் மூலம் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது. மேலும், தங்க ளின் இந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில், வரலாற்றை மோசடியாக திருத்தி வருகிறது. அந்த வகையில்தான் தற்போது, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு வரலாறு, குடிமையியல் மற்றும் ஹிந்தி பாடத் திட்டங்களில் பல்வேறு பகுதிகளை நீக்கி என்சிஇஆர்டி அறிவித்துள்ளது. குறிப்பாக, குடிமையியல் பாடப் புத்தகத்தி லிருந்து, ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்களையும், அரசியல் அறி வியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந்தியாவில் அர சியல்’ புத்தகத்தின் இரண்டு அத்தி யாயங்களையும் நீக்கியுள்ளது. அதாவது – ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனிக் கட்சி ஆதிக்க த்தின் சகாப்தம்’ ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சோசலிஸ்டுகள் மற்றும் கம் யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி போன்ற வை இந்த அத்தியாயங்களில் இடம் பெற்றி ருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. இவை தவிர, வரலாறு பாடப் புத்தகத்திலிருந்து முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயமே, அதாவது- (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றா ண்டுகள்) இந்திய வரலாறு – பகுதி II- (‘Kings and Chronicles’ and ‘The Mughal Courts’) நீக்கப் பட்டுள்ளது. இது தவிர ஹிந்தி புத்தகத்தில் இருந்து சில பத்திகள் மற்றும் கவிதைகளும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பகுதி களிலும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் நடப்பு 2023-24 கல்வி அமர்வு முதலேயே நடை முறைக்கு வரும் என்றும் என்சிஇஆர்டி தெரி வித்துள்ளது.
சிபிஎஸ்இ-யின் கீழ் உள்ள பள்ளி களைத் தவிர, சில மாநில வாரியங்களும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களையே பயன் படுத்துகின்றன என்ற நிலையில், அந்த மாநில வாரியங்களும், என்சி இஆர்டி புத்தகங்களின் திருத்தப் பட்ட பதிப்பைக் கடைப்பிடிக்கும் என்று அறிவித்துள்ளன.
குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநில பாஜக துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், அளித்துள்ள பேட்டி யில், “நாங்கள் என்சிஇஆர்டி புத்தகங்களைப் பயன் படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் என்ன உள்ளதோ, அதையே பின்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.