சென்னை, ஏப். 6 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங் கரை, தரமணி மற்றும் மீனம்பாக்கம் என 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (5.4.2023) தொடங்கி வைத்தார்.
அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தை திறந்துவைத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் நிலைய பணிகளையும் தொடங்கி வைத்தார். பின்னர் புதி தாக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள், மற் றும் காவலர்களை வாழ்த்தி பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கி னார். இதே போன்று கோயம்பேடு காவல் நிலைய வளாகத்தில் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையமும், புழல் காவல்நிலைய வளா கத்தில், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையமும், திருவான்மியூர் காவல் நிலைய வளாகத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையமும், தரமணி காவல் நிலைய வளாகத்தில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையமும், விமான நிலையம் காவல் நிலைய வளாகத்தில் மீனம்பாக்கம் அனைத்து மகளிர்காவல் நிலையமும் என 6 புதியஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள் நேற்று (5.4.2023) திறக்கப் பட்டன. கோட்டூர்புரம் காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்து வைத்த நிலையில் மற்ற 5 அனைத்து மகளிர் காவல் நிலையங் களையும் காவல் ஆணையர் சார்பில், காவல் கூடுதல் ஆணையர் கள், இணை ஆணையர்கள் திறந்துவைத்தனர்.