சென்னை, ஏப்.9-அகில இந்திய வரி பயிற்சியாளர்கள் சம்மேளனத்தின் (All India Federation of Tax Practitioners (AIFTP)) சார்பில், 07.04.2026 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சி. சரவணன், ஆடிட்டர் ஆர்.ராமச்சந்திரன் இயற்றிய ‘நிறுவனங்கள் அல்லாத அமைப்புகளுக்கான வருமான வரி விதிமுறைகள் (Income Tax provisions for NPO’S) – 1961 முதல் 2025 வரையிலான பயணம்’ என்ற நூலினை வெளியிட்டார். வருமான வரி (சென்னை) முதன்மை தலைமை ஆணையரான டி.சுதாகர ராவ், நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.உடன் அகில இந்திய வரி பயிற்சியாளர்கள் சம்மேளனத்தின் (All India Federation of Tax Practitioners (AIFTP)) தலைவர் டி.எம்.பட்டாட் (D.M.Battad).

