டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக் குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக் கப்பட்டுள்ளார். எடப்பாடியின் செயலாளரை தலைமைச் செயலாளராகவும், பாஜக ஆதரவாளரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகவும் நியமித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. நியாயமாக, சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டிய ஆணையம் இப்போது பாஜகவின் கிளைக் கழகமாக மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* தொகுதி மறுவரையறை ஆபத்து? சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்கள், மோடிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சபரிமலை வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஒரு நடைமுறை மதச்சார்பானதா? அல்லது மூடநம்பிக்கையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கும் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு நடைமுறை மூடநம்பிக்கையாக இருந்தால் அதை சீர்திருத்துவது சட்டமன்றத்தின் பொறுப்பு” என்று வாதிட்டார். ஆனால் நீதிபதிகள், சட்டமன்றம் மட்டும் அல்ல, நீதிமன்றத்திற்கும் ஒரு நடைமுறை மூடநம்பிக்கையா? என்பதை பரிசீலிக்கும் அதிகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தினர்.
* வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கேரளா பாஜக வேட்பாளர் சோபா சுரேந்திரன் மீது புகார். காணொலி வெளியாகி பரபரப்பு.
* பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா திருத்தத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல். ஏப்ரல் 16இல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு முடிவு.
தி ஹிந்து:
* தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கான அறிவிப்பை நிராகரிப்பதில் அவை குழுவினர் நாடாளுமன்றத்தைக் கடந்து சென்றனர். இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு யாரைக் கலந்தாலோசித்தார்கள் என்பதை வெளிப்படுத்தாமல், அவை குழுவினர் தங்களுக்குள் ஒரு “குறு விசாரணையை” நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
* திமுக கூட்டணியின் வெற்றி மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றியானது, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறின் அறிகுறியாக இருக்க வேண்டும் என்று திமுக எம்.பி.யும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பரப்புரையில் பேச்சு.
தி டெலிகிராப்:
* மேற்கு வங்க மாநிலம் முதலமைச்சர் மம்தா போட்டியிடும் தொகுதியில் உள்ள பபானிபூரில் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு (SIR) பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் முஸ்லிம்கள். இந்த நீக்கங்கள் தற்செயலானவை அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட குழுவினரை குறிவைத்து நடத்தப்படுபவை, மம்தா கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்கியதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடியின் “மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட” இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ‘தன்னைத்தானே விஸ்வகுரு என்று சொல்லிக்கொள்பவர் அம்பலமாகி யுள்ளார்’: ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சனம்.
– குடந்தை கருணா

