உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!

1 Min Read

திராவிட இயக்கத்தினுடைய தலைக் காவிரியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, தந்தை பெரியார் அவர்களுடைய சமத்துவக் கொள்கைகளை, இன்றைக்கு உலகெங்கிலும் பரப்பிக் கொண்டிருக்க கூடிய அய்யா (திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி) அவர்களை, போடி சட்டமன்றத் தொகுதி சார்பில், வருக! வருக! வருக! என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். இன்றைக்கு கழகத் தளபதி மு.க.ஸ்டாலினுடைய ஆட்சியில், எல்லா மக்களும் நல்ல வளங்களை பெற்று வாழக்கூடிய சூழல் நிலவுகிறது. அடுத்து யாருடைய ஆட்சி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்; யாருடைய ஆட்சி வந்தால் மாநில சுயாட்சி நமக்கு கிடைக்கும்; யாருடைய ஆட்சி வந்தால் தந்தை பெரியார்; பேரறிஞர் அண்ணா; முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகள் அடிப்படையில் நல்லாட்சி நடக்கும், அந்த ஆட்சி மறுபடியும் அமைய, அய்யா அவர்கள் கூறியபடி, நமது வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் முத்திரை பதித்து மாபெரும் வெற்றியை பெறுவதற்கு உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

– போடி சட்டமன்றத் தொகுதி
தேர்தல் பரப்புரை கூட்டத்தில்
மேனாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள் உரை, (8.4.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *