கலாசேத்ரா பேராசிரிசென்னை, ஏப். 6 மேனாள் மாணவி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் சென்னை கலாசேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதி ராக மாணவியின் தாயாரும், 3 தோழி களும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரின் பாலியல் சேட்டைகள் தாங்காமல், படிப்பை முழுவதும் தொடர முடிய வில்லை என்றும் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், பேராசிரியர் ஹரிபத்மன் உல்லாசத்துக்கு என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனு மீது உடனடியாக காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினார்கள். வழக்கில் சிக்கிய பேரா சிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட் டார். பின்னர் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஹரி பத்மன் தன் மீதுள்ள புகாரை மறுக் காமல், பாலியல் புகாரை பூசி மெழு கியது போல் வாக்குமூலத்தில் குறிப் பிட்டுள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹரி பத்மன் மீது புகார் கூறிய மாணவியின் தாயார் மற்றும் அவரது தோழிகள் மூவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். மாணவியின் தாயார் கூறுகையில், ‘ஹரிபத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுக் கிறார், நடனம் சொல்லித் தருவதாக வீட்டுக்கு அழைக்கிறார். அது நடனம் சொல்லித்தருவதற்காக அல்ல, என்னி டம் உல்லாசமாக இருக்க அவர் துடி யாய், துடிக்கிறார், என்று எனது மகள் வருத்தப்பட்டாள். தனது இச்சைக்கு இணங்காததால், எனது மகளை வெளி யூர் நடன நிகழ்ச்சிக்கும் போகவிடாமல் தடுத்தார்.
இதுபற்றி கலாசேத்ரா நிர்வாகத் திடம் புகார் கொடுத்தும், உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. ஹரிபத்மன் கொடுத்த தொல்லையால்தான், எனது மகள் படிப்பை முடிக்காமல், வெளி யேறினாள்’ என்றும் தாயார் கூறியதாக காவலர்கள் தெரிவித்தனர். நாங்கள் கொடுத்த ஊக்கத்தில் தான், காவல் துறையினரிடம் துணிச்சலாக எனது மகள் புகார் கொடுத்தாள் என்றும் தாயார் கூறியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பேராசிரியர் ஹரிபத்மன் மீது, பல முறை புகார் கொடுத்த போதும், கலாசேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணை கூட நடத்தவில்லை. அதனால்தான் அவர் காமவெறியாட்டம் போட்டார். அவர் எல்லை மீறி நடப்பதை நாங்கள் நேரடியாக பார்த்துள்ளோம். வெளி ஊர்களில் நடன நிகழ்ச்சிக்கு செல்லும் போதும், அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார், என்றும் தோழிகள் மூவரும் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஹரிபத்மனை தேவைப் பட்டால், காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம், என்று குறிப்பிட்ட காவல்துறையினர் ஹரிபத்மனுடன் புகாரில் சிக்கிய உதவி நடன கலை ஞர்களான சஞ்ஜித்லால், சாய் கிருஷ்ணன், சிறீநாத் ஆகிய 3 பேர் மீதும் யாரும் இதுவரை எழுத்து மூலம் புகார் கொடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கை பொறுத்தமட்டில் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது, பாதிக்கப்பட்ட வர்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று உயர் காவல் அதிகாரி ஒருவர் உறுதிபட கூறினார்.