புதுடில்லி, நவ.5 சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது என டில்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித் துள்ளது.
பீகாரைச் சேர்ந்த 96 வயதான சுதந்திர போராட்ட வீரர் உத்தம் லால்சிங் ஓய்வூதியம் கோரி விண் ணப்பித்துள்ளார்.
1983இல் ஓய்வூதியம் வழங்க பீகார் அரசு, ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் 2009 வரை நடவடிக்கை இல்லை என மனுதாக்கல் செய்யப் பட்டது. 2017இல் பீகார் அரசு அனுப்பிய பரிந்துரை தங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு கூறியது. பல அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டும் பலன் கிடைக்காததால் டில்லி உயர் நீதிமன்றத்தில் உத்தம் லால்சிங் வழக்கு தொடர்ந்தார். 1980 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை 6% வட்டி யுடன் 12 வாரத்தில் வழங்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருந்த ஒன்றிய அரசுக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஒன்றிய அரசு காட்டும் அக்கறை வேதனை அளிப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.