காந்தாரிக் கூட்டம் கதறுகிறது – தினமலருக்குத் தேள் கொட்டுவது – ஏன்?

3 Min Read

இன்றைய சென்னைப் பதிப்பு தி(இ)னமலரில்  திரிநூல் பார்ப்பனியத்துக்கே உரித்தான முறையில் தன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளவும், நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க.) மண்ணைக் கவ்வப் போகிறது என்ற ஆத்திரத்திலும், தங்களுக்கே உரித்தான விஷமத்தனத்தோடு கோணங்கித்தனமாக – ரத்தம் வடிவதுபற்றிக் கவலையில்லாமல் அரிப்பைச் சொறிந்து கொள்ளும் தன்மையிலும், பார்ப்பன ஆதிக்கத்தின் வாலை ஒட்ட நறுக்கிய திராவிடர் கழகத்தின்மீது – அதன் தலைவர்மீது, கற்பனைக் கழுதை மேலேறி ஆத்திரத்தைக் கத்தித் தீர்த்துள்ளது.

‘தி.க. தலைவர் வீரமணி, எங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்’ என தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் கட்சித்தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளனராம்.

பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்று புராணம் எழுதிப் பழக்கப் பட்டவர்கள் ஆயிற்றே! எதைக் கொண்டு சாத்தினாலும் அவர்கள் பிறவிப்புத்தி அவர்களை விட்டுப் போகுமா?

அறிவு நாணயமிருந்தால்,

‘‘தி.க. தலைவர் வீரமணி தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம்’’ என்று தி.மு.க. தலைமைக்குப் புகார் செய்தவர்கள் யார் யார்? என்று பெயர்களைச் சொல்ல  வேண்டியதுதானே! ‘‘அறிவு நாணயம் என்றால் கிலோ என்ன விலை?’’ என்று கேட்கக் கூடிய கூட்டமாயிற்றே.

உண்மையாக அப்படிப் புகார் செய்திருந்தால் தானே பெயர்களைப் பட்டியல் போட முடியும். அக்கப்போராக எழுதுவது என்று முடிவுசெய்து விட்டால், சாக்கடைத் தண்ணீரால் பேனாவை நிரப்பிக் கிறுக்கித்தள்ள வேண்டியதுதானே!

…காட்டி மானியம் வாங்கிய கும்பலாயிற்றே!  ‘அய்வருக்கும் தேவி என்று சொல்லி,  அழியாதபத்தினி!’ என்று அழிச்சாட்டியமாக எழுதும் கும்பலாயிற்றே!

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட தருணத்திலிருந்து, பெரியார் திடலுக்கு வந்து தி.மு.க.வும், கூட்டணி வேட்பாளர்களும் திராவிடர் கழகத் தலைவரைச் சந்தித்தும், பொன்னாடை அணிவித்தும்,  தங்கள் தொகுதிக்குப் பிரச்சாரம் செய்யவும் கேட்டுக் கொண்டே இருந்தனர் என்பது தெரியுமா? படங்களுடன் ‘விடுதலை’ வெளியிட்டதே – கண்கள் பிடரியிலா இருக்கின்றன?

எல்லோருடைய விருப்பத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. 93 வயதில் கொளுத்தும் வெய்யிலிலும் தேர்தல் பொழிப்புரை செய்ய புறப்பட்டார் திராவிடர் கழகத் தலைவர் என்பதுதான் உண்மை.

தேர்தல் பரப்புரையின் கடைசி நேரம் வரை பரப்புரை செய்கிறார்.

சில நாட்களில் காலை, மாலை இரு வேளைகளும் திராவிடர் கழகத் தலைவரின் பிரச்சாரம் அடை மழையாகப் பொழிகிறது.

1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் வரை பிரச்சாரம் செய்த ஒரே தலைவர் மானமிகு கி. வீரமணிஅவர்கள்தான் என்பது – இந்தக் கத்துக்குட்டிகளுக்குத் தெரியுமா?

1971 – சேலம் தி.க. மாநாட்டு ஊர்வலத்தில் ராமனுக்குப் ‘பட்டாபிஷேகம்!’ செய்தனர் திராவிடர் கழகத் தோழர்கள் என்று இட்டுக் கட்டிப் பிரச்சாரம் செய்த வகையறாக்ககள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

ஆச்சாரியாரே (ராஜகோபாலாச்சாரியார்) மல்லுக்கட்டிப் பிரச்சாரம் செய்து பார்த்தாரே!

அந்தத் தேர்தலிலும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, தமிழ்நாட்டையே வலம் வந்தவர் தி.க. தலைவர் வீரமணி என்பது தெரியுமா?

அவர் பிரச்சாரத்தால் தி.மு.க. தோற்றதா? இதுவரை காணாத மகத்தான வெற்றியைத் திமுக பெற்றதே! 234 இடங்களில் 184 இடங்களில் வெற்றிக் கொடி நாட்டியதே தி.மு.க.,

தந்தை பெரியார் முன்னிலையில் முதலமைச்சர் கலைஞரும், அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்து, ஒவ்வொருவராக வந்து தந்தை பெரியாரிடம் ஆசி பெற்றனர் என்ற வரலாறு தெரியுமா இந்த வந்தேறிகளுக்கு?

அந்தத் தேர்தல் முடிவுக்குப் பின் இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஆச்சாரியார் ஒப்பாரி வைக்கவில்லையா?

ஆட்சிப் பீடம் ஏறிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ‘‘இது சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு!’’ என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் செய்யவில்லையா?

இப்பொழுது தினமலரான இனமலர்க் கும்பலுக்கு ஆத்திரம் பீறிட்டு எழுந்திருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலோ பா.ஜ.க., அதிமுக சேர்ந்த என்.டி.ஏ. கூட்டணியிலோ ஒரே ஒரு பார்ப்பனருக்குக்கூட இடம் கிடைக்கவில்லை. பார்ப்பன ஜனதாவான பா.ஜ.க. கூட தன் வேட்பாளர் பட்டியலில் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்கவில்லையே – ‘கல்தா’ கொடுத்து விட்டதே!

ஆமாம்,  இது ‘பெரியார் மண்’ என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

பாவம் ‘தினமலர்’களுக்குப் பிடித்தமான – தன் வயிற்றில் அடித்துக் கொண்ட காந்தாரிக் கதை தான்!

இன்னொரு கூடுதல் தகவல்: 2021–2026 தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரே ஒரு பார்ப்பனர்கூடக் கிடையாதே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *