சூரியனில் 2ஆவது ராட்சதத் துளை பூமியை விட 30 மடங்கு பெரியது
நமது பால்வெளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் சூரியனின் மேற்பரப்பில் ராட்சத ‘துளை’ ஒன்று தோன்றியுள்ளது. இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப் படுகிறது.
இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று வந்தடையும். இதனை தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசி லாந்து ஆகிய நாடுகள் உணரலாம். இந்த வெடிப்புகளிலிருந்து வெளி யேறும் வெப்பக் கதிர்களால் ரேடியோ தகவல் தொடர்புகள், விண்கலம், விண்வெளி வீரர்க ளுக்கு ஆபத்து ஏற்படலாம்.
மேலும், இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம்” என்றனர்.
சூரியனில் ஏற்படும் இந்த கரோனல் துளைகள் மிகவும் பொது வானவை, ஆனால், அவை பெரும் பாலும் சூரியனின் துருவங்களை நோக்கியே தோன்றும், அங்கு அவற்றின் சூரியக் காற்று விண் வெளியில் வீசப்படும்.
ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரியனில் ஏற்படும் மாறுதலுக்கு சூரியன் தயாராகி வருவதால், இந்தத் துளைகள் சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் சூரியனின் மேற்பரப்பி லிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அத னுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரி வித்தனர். இந்த நிலையில், தற் போது சூரியனில் இரண்டாவது துளை உருவாகி இருக்கிறது.