சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்:
சென்னை பல்கலைக்கழகத்தின் தேசிய நானோஅறிவியல் மற்றும் நானோதொழில்நுட்ப மையத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2026
புராஜக்ட் அசிஸ்டண்ட்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: எம்.எஸ்சி. / எம்.டெக் (நானோ டெக்னாலஜி / பயோ டெக்னாலஜி / பயோ கெமிஸ்ட்ரி / பயோ மெடிக்கல் சயன்ஸ் / மைக்ரோ பயாலஜி) படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/webportal/uploads/appointments/CMRG_Advertisement_20260325091313_81514.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி: டாக்டர் எம்.ஜெயராஜ், அசிஸ்டண்ட் புரோபசர், நேஷனல் சென்டர் ஃபார் நானோ சயின்ஸ் அண்ட் நானோ டெக்னாலஜி, யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், கிண்டி கேம்பஸ், சென்னை – 600025.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2026

