கொல்கத்தா, ஏப்.6 மேற்கு வங்கத் தில் ராம நவமி ஊர்வலங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக மாநில முதலமைச்சர் மம்தா குற்றஞ்சாட்டி யுள்ளார். மேற்கு வங்க கவுளரா, ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில், அண்மையில் ராம நவமி கொண் டாட்டங்களின்போது வன்முறை ஏற் பட்டது. இந்த வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக, அந்த மாநிலத்தில் உள்ள கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல மைச்சர் மம்தா பேசியதாவது:
ஹூக்ளி மற்றும் கவுளராவில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் பாஜக உள்ளது. மேற்கு வங்கத்தில் வன் முறையை கட்டவிழ்த்துவிட அக்கட்சியினர் வெளிமாநிலங்களில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்துள்ளனர்.
அவர்கள் ஒரு சமூகத்தினரை மற் றொரு சமூகத்தினருக்கு எதிராக நிறுத்தி ஹிந்து மதத்தை இழிவுபடுத் துகின்றனர். ஆனால் கலவரக்காரர் களுக்கு மதம் ஏதும் கிடையாது. அவர்கள் வெறும் அரசியல் ரவுடிகள்தான்.
பாஜகவின் ஹிந்துத்துவத்தில் நம்பிக்கையில்லை
ராம நவமி ஊர்வலங்களில் பாஜக தலைவர்கள் புல்டோசர்கள், ட்ராக் டர்கள், பெட்ரோல் குண்டுகள், துப் பாக்கிகள், வாள்களை எடுத்து வந்தனர்.
பீகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அங்குள்ள கலவரக்காரர்கள் தலை கீழாகக் கட்டித் தொங்கவிடப்படு வார்கள் என்று அக்கட்சி தெரிவித்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் பிரச் சினையைத் தூண்டும் பாஜக ரவுடி களை அக்கட்சி தலைகீழாக தொங்க விடாதது ஏன்? நானும் சுவாமி விவே கானந்தரின் ஹிந்துத்துவத்தைப் பின் பற்றும் ஹிந்துதான். பாஜகவின் ஹிந் துத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்றார்.