இந்நாள் – அந்நாள் மெல்வின் கால்வின் பிறந்த நாள் (8.4.1911)

1 Min Read

மெல்வின் கால்வின்  “ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு சர்க்கரையாக மாறுகிறது” என்பதைக் கண்டறிந்தவர். (இது கால்வின் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது).

மெல்வின் கால்வின் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி, அமெரிக்காவின் மினசோட்டா  மாநிலத்தில் உள்ள செயின்ட் பால்  நகரில் பிறந்தார்.

பெற்றோர்: இவருடைய தந்தை எலியாஸ் கால்வின் மற்றும் தாய் ரோசா ஹெர்விக். இவர்கள் இருவரும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

மெல்வின் கால்வின் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் வளர்ந்தார். அவரது தந்தை ஒரு தையல் தொழிலாளி. சிறுவயது முதலே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக மெல்வின் திகழ்ந்தார்.

அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மிச்சிகன் தொழில்நுட்பக் கல்லூரியில்  1931 ஆம் ஆண்டு வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் பயின்று 1935 ஆம் ஆண்டு வேதியியலில் முனைவர்  பட்டம் பெற்றார். வேதியியல் துறையில் இவர் ஆற்றிய மிகச்சிறந்த பணிக்காக, குறிப்பாக ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளுக்காக, 1961 ஆம் ஆண்டு இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *