உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை
புதுடில்லி, ஏப். 6 பன்னாட்டு அளவில் ஆறில் ஒருவரை மலட் டுத்தன்மை பாதித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இயல்பான பாலுறவுக்குப் பின் 12 மாதங்களோ அதற்கு மேல் வரையோ கரு உருவாகாமல் இருப்பதே மலட்டுத்தன்மை என அறியப் படுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பன்னாட்டு அளவில் மலட்டுத்தன்மை குறித்த ஆய்வை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில், “பன் னாட்டு அளவில் 18 வயதைக் கடந்தவர்களில் 17.5 சதவீதம் பேர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப் படுகின்றனர். பன்னாட்டு அள வில் ஆறில் ஒருவர் அந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 17.8 சதவீதம் பேரும், நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 16.5 சதவீதம் பேரும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப் படுகின்றனர்.
மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்து கிறது. முக்கியமாக, மலட்டுத் தன்மை சார்ந்த சிகிச்சைகள் குறித்த ஆராய்ச்சி-மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
மலட்டுத்தன்மைக்கான அய்விஎஃப் உள்ளிட்ட முறைகள் அதிக செலவு கொண்டதாக இருக்கின்றன. சமூகத்தின் பெரும்பாலான தரப்பினருக்கு அந்த வகை சிகிச்சை முறைகள் எட்டாக்கனியாகவே உள்ளன. இத்தகைய சூழல் மருத்துவ ஏழ்மை நிலையை ஊக்குவிக் கிறது. மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை முறைகள் மேம்படுத்தப் படுவதற்கு உரிய கொள்கைகளை நாடுகள் வகுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.