வேற கட்சியில இருந்து கடைசி நேரத்தில தாவுனவங்க கொஞ்சம், ரசிகர் மன்றத்தில கொஞ்சம், குற்ற வழக்குடையோர் கொஞ்சம்னு பகுமானமா 232 தொகுதிக்கும்(!) ஆள் புடிச்சு, தானும் ரெண்டு தொகுதியில நிக்கிறதா அறிவிச்சு, ஒரே தொகுதியிலேயே வேட்புமனுவை ஒன்றுக்கு மூணு தடவையா திருத்தித் திருத்தி தாக்கல் செஞ்சு ஒரு வழியா தேர்தலுக்குள்ள வந்துட்டார் நடிகர்!
ஆனா, பிரச்சாரத்துக்குத்தான் இல்லாத சாக்குப் போக்கெல்லாம் சொல்றாங்க! காவல்துறை அனுமதி கொடுத்தாலும், திடீர் திடீர்னு ரத்து பண்ணிக்கிட்டே இருக்கிறதால, ‘தமிழக ரத்துக் கழகம்’னு செல்லமா பெயர் வச்சிருக்காங்க நெட்டிசன்கள்!
இவர் இந்தா வருவார்… அந்தா வருவாருன்னு காத்திருந்து காத்திருந்து நொந்து போன வேட்பாளர்கள், இப்போ “உங்க விஜய் நா வரேன்னு பாட்டெல்லாம் போட்டியேண்ணா… ஆளு மட்டும் வரமாட்டுறியே”ன்னு நொந்து போய் வேற வழியில்லாமல், விஜய் பொம்மையைச் செஞ்சு வண்டியில ஏத்தி ஓட்டுக் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க!
ஒரு காலத்தில இரவு – பகலா தான் சுற்றுப் பயணம் செஞ்சாலும் தொகுதியை முடிக்க முடியாதுன்னு எல்லா ஊருக்கும் தன்னுடைய கட் அவுட்டைச் செஞ்சு ஜீப்ல கட்டி வச்சு அனுப்பினாராம் எம்.ஜி.ஆர்!
அதைப் பிடுச்சிக்கிட்டு, டெய்லி டெய்லி சுற்றுப் பயணம் அறிவிக்கிறது… அப்புறம் ரத்து பண்றதுன்னு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்கும் விஜய்ண்ணாவை நம்பாம, பொம்மைக்கு ஆர்டர் கொடுத்துட்டாங்க போல!
பொம்மை ஆட்சி கேள்விப்பட்டிருக்கிறோம்… அடங்கப்பா… பொம்மை கட்சிய இப்போதாம்பா பார்க்கிறோம்!
– குப்பைக் கோழியார்

